புரிதல் அற்ற உறவுகள்

புரிதலற்ற உறவுகள்
___பூமியில் மாயங்கள்
புரிந்த நெஞ்சில்
___புண்கள் இடவே
பாசத்தை அறுத்துப்
__பரிதவிக்கும் பாவிகள்
பாலில் கலந்தே
__பாவியாய் இருப்பார்
மேலுமில்லை கீழுமில்லை
___நோயாக தாழ்த்தியே
மோதலை உண்டாக்கியே
___கோபம் வீசியே
உள்ளம் மதனை
___உருக்கியே கொன்றே
உறவுகளை பிரித்தே
____ஊர்கோலம் செய்வார்
நினைக்கையில் கசக்குதே
___ நிந்தையான உறவை
நிலையான உறவையே
___நிறைவேற்ற முடியாமல்
மனங்கள் முழுவதிலும்
__ எண்ணம் சதிராட
மரித்தே கண்ணீரும்
___மருவியே வருகிறதே
உறவில் நிலைத்து
___உரிமையில் பங்குண்டு
உறவை உலுக்கி
__உரசும் பொருத்தமற்ற
புரிதலில்லாத உறவினை
___புறம்தள்ளியே வைத்தே
புன்னகையோடு வாழ்ந்து
___புதுமையாய் வாழ்ந்துடுவோம்
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (29-Mar-19, 10:18 am)
பார்வை : 445

மேலே