தயாராகுங்கள்
இதோ பார் வேடிக்கை
உன்னை நோக்கி உயர்த்திய விரல்கள்
இன்று உன்னை கும்பிட்டவாறு
வருவதை பார் !
என்னே ஒற்றுமை
மதுகையினில் மாது கொண்டவனும்
பச்சிளம் சிசு கொன்றவனும் ஒன்றாக
உன்னிடம் வருவதை பார் !
வாடிவாசல், நெடுவாசல்
கதிரமங்கலம் இவைஅணிதம்
நீட்டியதால் கொடுவாசல்
ஏதுமின்றி - கார்ப்ரேட்
கைகூலி வருவதை எண்ணிப்பார் !
ஐந்தாண்டுக்குமுன் வணிந்தவனும்
பின் ஐந்தாண்டுக்கு ஏங்குபவனும்
இணைந்தே வருவதை பார்!
கண்முண்ணே கண்ட
காயத்தையும் மறந்தே - உன்
கண்முன்னும் சூடு கொடுத்த
சூரனும் அந்த எண்ணம்
மாறாமல் உன்னிடமே
வருவதை பார் !
உடனிருந்து கொள்ளுபவனும்
புறமிருந்து தள்ளூபவனும்
ஒன்றாகவே வளம் வருவதை பார் !
ஓர் இரவில் காசு
செல்ல காசாக்கியவனும்
விடியவண்ணம் உன்னை
கசக்கியவனும் ஒன்றாக வருவதை பார் !
வலியவனுக்கும்
எளியவனுக்கும் "வாக்கு" முக்கியம்,
வலியவன் கேட்கிறான்
எளியவன் கொடுத்துவிட்டு
நிக்காதே ! ஆதலால்
தயாராகு நீ
உன் கோரிக்கைகளை களையும்
திறன் யாரிடம்மென
அறியும் உன் விரல் ஆயுதம்
பயன் படுத்து
பணத்துக்காக இல்லாமல்
நம் தலைமுறை
தப்பிப்பிழைக்க
தயாராகு நீயும் நானும் !