நெருப்பும் நீரும்
தித்திக்கும் அது தேனுமல்ல
இனிக்கும் அது சர்கரையுமல்ல
கசக்கும் அது பாகற்காயுமல்ல
புளிக்கும் அது மாங்காயுமல்ல
உறைக்கும் அது மிளகாயுமல்ல
எரிக்கும் அது நெருப்புமல்ல
இத்தனையும் வார்த்தைக்குள்
குளிரும் அது தண்ணீருமல்ல
கொப்பளிக்கும் அது பன்னீருமல்ல
சாய்க்கும் அது புயலுமல்ல
அடக்கும் அது ஆணவமுமல்ல
பொறுக்கும் அது பூமியுமல்ல
பொசுக்கும் அது அக்கினியுமல்ல
அத்தனையும் அன்புக்குள்