வேம்பு
கவிஞர்கள் சங்கமம்
தலைப்பு
வேப்ப மரம்
அன்று
பேய்களெல்லாம்
வேப்ப மர உச்சியில்
ஆடியது
இன்றோ
நாம் மரத்தை வெட்டியதால்
திரைப்படத்தில்
ஆட வந்துவிட்டது
எத்தனை சட்டங்கள்
போட்டாலும்
மரம் சட்டங்கள்
செய்யவே வெட்டப்படுகிறது
மனித நிழலில்
கிடைக்காத ஞானம்
புத்தனுக்கு மரத்தின்
நிழலில் கிடைத்தது
நோய் தீர்க்க
வேம்பு தரும்
எண்ணெய்
இறைவா
அடுத்தப் பிறவியில்
வேம்பு மரமாக்கு
என்னை
அன்று
பூச்சிகளைக்
கொள்ள
வெப்பங்கொழுந்தே
மாத்திரை
இன்றோ
மாத்திரைகள்
போட்டன அதற்கு
மா திரை
மனிதா
அமில மருந்துகளை
நீ விலக்கு
இயற்கை மருத்துவத்தின்
மகத்துவத்தை
நீ விளக்கு
அப்போதுதான்
அணையாது எரியும்
உன் வீட்டு விளக்கு