சன்னலோரம்

31. சன்னலோரம்

சன்னலோர கவிதைப்பூ
சந்தங்கள் படிக்கிறது
கண் சிமிட்டி அழைக்கிறது
விரைந்தோடி பார்க்கையிலே
கானல் நீராய் போகிறது
சிலநேரம் மாயம்
பலநேரம் காயம்
ஈதென்ன ஜாலம்
மௌனக்கத்தியால்
மனத்தை கிழித்து
ரணத்தை கொடுக்கிறாளே
விழிகளுருட்டி என்மேல்
வலிகளை திரட்டுகிறாள்
விரலசைவில் காதல்
மின்னல் பாய்ச்சுகிறாள் - தொடட்டும்
தென்றல் என்றெண்ணுகையில்
புயலாயேனோ மையம் கொள்கிறாள் !

மு. ஏழுமலை.

எழுதியவர் : மு.ஏழுமலை (29-Mar-19, 4:12 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 113

மேலே