கண்ணுக்கினியால்

கண்ணுக்கினியால்

கண்ணுக்கினியால்
கதை சொல்லிப்போனால்
கருவிழியால் - காளையவனோ
காண விழைகையில்
கார்மேகம் மறைத்த
கவிநிலவாய்
காணாமல் போனால்
கருக்குவேலையிலே
கண்பறிக்கும் விண்மீனாய்
கயல்விழி சுழற்றினாள்
கனத்த நெஞ்சினிலே
காதல் சுமையேற்றினால்
கன்னியிளமையிலின்
கால்கொலுசு கேட்டதும்
காற்றாற்று வெள்ளமாய்
கரைபுரண்டது வார்த்தைகள்
கவிதையாய்
காற்றுக்கிழிக்கும் குழலாய்
கானங்கள் நெஞ்சினிலே
கலகலவென ஒலித்தது
கால் சலங்கையாய் - காளை
கார்மேகத்தில் பறந்தான் - அவள்
கட்டழுகு கடலினிலே மிதந்தான்
காரிருள் புலர்ந்தபின்னே
கண்ணுற்று தெளிந்தான்
கனவென அறிந்தான்.
மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (29-Mar-19, 4:21 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 195

மேலே