ஒரு இந்திய நடை பாதை
அதோ!
நடை பாதையின் மேலே ஏதோ கிடக்கிறது...
தூரத்திலிருந்து பார்க்கையில்
மங்கிய கருப்பாய்
மனது பதைத்தது...
அது குப்பை மூட்டையாக இருக்கலாம்...
ஒரு நாய் படுத்திருக்க கூடும்...
இல்லை சுருண்டு கிடக்கும்
உயிர் இருந்தோ உயிர் இல்லாத மனிதனாக கூட
இருக்க கூடும்...
இது இந்திய நகரத்து நடைபாதை!