கண்ணன் தந்த முத்தங்கள்

அருகில் வந்தாய் கட்டி அணைத்தாய்
முத்து முத்தாய் முத்தங்கள் தந்து
என் கன்னங்களிரண்டும் நனைய
முத்து மழைப்பொழிந்தாய் கண்ணா
உன்னைக் கட்டி அணைத்து மடியிலேயே
கட்டிப்போட்டு கொஞ்சிட நினைத்தேன்
கண் திறந்து பார்க்கையிலே கண்ணா
நீ எங்கும் இல்லையே எங்கு போனாயோ
மாய கண்ணா என்னுள்ளமெல்லாம் நீயே
உன்மேல் தீராக் காதல் கொண்டேனடா
என் சின்னக் கண்ணா உன் தாய் நான்
எனக்கு கனவின்றி நிஜமான தரிசனம்
தரும் நாள் எதுவோ அதைத்தேடி நான்
கண்ணா, கண்ணா மணிவண்ணா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Mar-19, 12:13 pm)
பார்வை : 62

மேலே