கிரகத்தில் முளைத்த உயிரோ

ஆணாய் ஆனவனோ - அன்றி
பெண்ணாய் ஆனவளோ - பிற
பொருளாய் ஆனததுவோ - நல்ல
காற்றின் மூலமதுவோ - வெம்மை
ஒளியின் தோற்றமானதோ - இனிய
நாதத்தின் பிறப்பின் விதையோ - வேற்று
கிரகத்தில் முளைத்த உயிரினமோ - அனலின்
வலிமை மிகுந்த எழுச்சி நிலையோ
எவற்றில் நீ நிலைத்து உள்ளாய் - உலகின்
மாற்றமடையாமல் உள்ள இறையே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Apr-19, 6:00 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 358

மேலே