வாழ்வின் ருசி

பேதைமை என்பது
வாழ்வின் ருசிகளைத்
திறந்து காட்டுகிறது.

முதிர்ச்சியில்
கேள்விகளின் தொல்லை.

என்ன? ஏன்? எவ்வாறு?
எதற்கு என்ற கேள்விகள்
ஆய்வை நோக்கி மட்டுமல்ல
சாய்வை நோக்கியும்
நகர்த்துகின்றன.

அறிவை மேயவிட்ட பிறகு
பிடித்துக் கட்ட முடியவில்லை.

யோசிக்க, யோசிக்க
நிர்மலமா?
வேறு ஏதாவது
தட்டுப் படுகிறதா?
துக்கம் மட்டுமல்ல
தூக்கமும் தொலைந்துபோகும்.

எழுதியவர் : கனவுதாசன் (7-Apr-19, 11:22 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : vaazhvin rusi
பார்வை : 78

மேலே