அறத்தின் மணி
கட்டி எழுப்பப்பட்ட
பிம்பங்களின் உயரத்தை
அண்ணாந்து பார்த்துத்
தொலைந்து போனோம்.
மூளைச் சோம்பேறித்தனத்தில்
எவன் சொன்னதையோ
ஏற்றுக் கொண்டோம்.
நம் மூளையில்
எவனோ
சவ்வாரி செய்கிறான்.
தெரிந்ததைக் கூட
கூட்டவோ? குறைக்கவோ?
மறைக்கவோ?
மனச் சாய்வுக்கு ஆட்பட்டுத்
தாழ்ந்து போகிறோம்.
அறத்தின் மணி
அடித்துக் கொண்டேதான்
இருக்கிறது;
செவிடாகிப் போனோம்.
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்
‘வாழ்க்கை’
நம்மை வாழவிடுவதில்லை.