கண்ணசைவில் பேசி
கண்ணசைவில் பேசி காதல்
உருவாக்கினாய்
காதல் எனும் கடலில் நீந்த
கட்டமரமானாய்
நீந்தி கரை சேர்ந்த என்னுள்
நீங்கா நினைவானாய்
பாவை உனக்கு புரிகிறதா
பாமரன் படும் வேதனை
விரல் கோர்த்து நீ நடந்தால்
விண்மீன் பரிசளிப்பேன்
பரல் மாணிக்க நகையோடு
பட்டும் நான் கொடுப்பேன்
என்று உன் சம்மதமோ
அன்றே நம் காதல் ஜெயம்
வெல்வோம் இந்த சாதி மதம்
சொல்வோம் எல்லாம்
இறைவன் மயம்...அப்புறம்
இவ்வுலகில் இனி ஏது பயம்