வசந்தம் தந்த காதல்

காதலியைத் தேடி அலைந்தேன்
காதலியாரும் கிடைக்கவில்லை
நொந்த என்மனமும் பட்டமரம்போல்
ஆனது ........இலையுதிர்க் காலமது
வசந்தம் வந்தது தென்றலுடன் சேர்ந்து
என்னுள்ளமும் குளிர்ந்தது , மீண்டும்
எனக்கேற்றவாளைத் தேடி அலைந்தேன்
தென்றலுடன் ஒரு தேவதைப்போல்
மங்கையொருத்தி என் கண்முன்னே தோன்றினாள்
பார்வையையும் என் மீது வீசினாள்
இன்ப அதிர்ச்சியில் எனக்கு காலும்
ஓடவில்லை, கையும் ஓடவில்லை
என்னையே கொஞ்சம் கிள்ளிப் பார்ததேன்
நான் காண்பது நிஜம்தான் என்னோடு
உறவாட அவள் மடநெஞ்சமும் கண்களும்
துடி துடிப்பதை உணர்ந்தேன்
பட்டமரம்போல் இருந்த உள்ளத்தில்
வசந்தத்தில் முளைத்த இளம் குருத்து இலைகளுடன்
காட்சி தரும் பசுமரமானதென் உள்ளம்
வா வசந்தமே வா குளிர்தென்றலே வா
எனக்கு காதலியைத் தந்தமைக்கு
நன்றி சொல்வேன் நன்றி சொல்வேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Apr-19, 12:44 pm)
பார்வை : 257

மேலே