உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் – நன்னெறி 26
நேரிசை வெண்பா
உடலின் சிறுமைகண்(டு) ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்
விண்அளவா யிற்றோ விளம்பு. 26 - நன்னெறி
பொருளுரை:
மடந்தையே! கதிரவனின் ஒளியின் அளவு நம் கண் அளவா அல்லது விண் அளவா கூறு.
அது போலவே புலவர்களும் ஒருவர் உடல் சிறுமையைக் கொண்டு அவர்கள் கல்விக் கடலின் அளவை அலக்ஷ்யம் செய்யார்.