புற்று ஒன்று இதயத்தில்
தானாகவே இயங்குது இதயமும் நாசியும்
தடை அதற்கு ஏதும் வரின் தடைபடும் எல்லாமும்
உரியதை உண்டு வாழ்வின் உயிர் நிலை ஓங்கிடும்
முரண்பட்டதை உட்கொள்ளின் சிதைந்து அழிந்திடும்
பதைபதைப்பும் பதட்டமும் பலத்தினை குறைத்திடும்
பகுத்தறியப் பழகிவிட்டால் பாதுகாப்பு கூடிடும்
போதையைப் புகுத்தி புதுச்சுரத்தை ஏற்றி வைத்தால்
புற்று ஒன்று இதயத்தில் புதிய தாய் முளைத்திடும்
எச் சூழ்நிலை வந்தாலும் இவ்விரண்டையும் வாட்டாதே
இயற்கைக்கு மாறாக எந்நாளும் நடக்காதே.
--- நன்னாடன்