அவதார இளையராஜா
ஆரோகணம் அவரோகணம் அழகாய் எடுத்து
அதற்கேற்று மெட்டுகள் பல அமைத்து
கச்சித வார்த்தைகளால் கனகச்சித பாட்டமைத்து
நிச்சய சுவைக் கூட்டி நீதிநெறி விளக்கம் அமைத்து
நீதி கெடுத்த மனிதனும் நித்தமும் மகிழ
வைத்தியன் போல் பாட்டில் மருந்தமைத்து
காற்றில் தவழவிட்டு காலத்தை வென்றெடுத்த
கடவுளின் மறு உருவத்தில் காட்சித் தரும்
சப்த சுரத்தின் கோ வேந்தனை கும்பிட்டு தொழுது
சரிசம காலத்தில் வாழ்ந்ததை எண்ணி மகிழ்வோம்.
--- நன்னாடன்