ராம நாமம் பருகிடு மனமே

நீண்டநாள் வாழ்ந்திட காயகல்பம்
நாடி தேடிபோகும் மனிதன்
ஈசனே உமைக்கு பரிந்துரைத்த அமுதம்
ராம நாமத்தை மனதில் ஏற்றி போற்றிட
வல்வினைகள் அத்தனையும் போம் இம்மை
மறுமை இன்பங்கள் நம்மை வந்தடையும் இன்னும்
ஏன் தயக்கம் ராம நாம அமுதை பருகிட
இன்றே இப்போதே நவில்வோமே சிரத்தையுடன்
ராம நாமமாம் தாரக மந்திரத்தை
பிறவிப் பெருந்துயர் நீந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Apr-19, 6:15 am)
பார்வை : 62

மேலே