விடியும் வேளை

விடியும்வரை
வியாபித்திருந்தது
பனிநீரின் அரசாங்கம்..

பச்சைப் புல்நுனிமுதல்
பரந்துயர்ந்த மரங்கள்
பட்ட மரங்கள்,
விட்டுவிடவில்லை எதையும்
எட்டும் தூரம்வரை..

ஆட்சி மாறுகிறது
அதிகாலையில்,
பகலவன் வருகிறான்
பதவி ஏற்க..

பதறி ஓடும்
பழைய ஆட்சியாளர்கள்-
பனித்துளிகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Apr-19, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 160

மேலே