வளையல் போல! கையில் கோர்த்து!

வளையல் போல
வளைத்து என்னை
கையில் கோர்த்து போறவளே...
காதில் காதல்
தேனையூற்றவா!
சற்று என்னுள்நீ நீரூற்றவா!
காதல் மலரிங்கே மலர்ந்து கெடக்குது-நீ
சொல்லும் வார்த்தையில் கண்ணம்
சிவந்து கெடக்குது-என்
நெற்றியில் நீமுத்தம் வைக்க-உயிர்
வறண்டு கெடக்குது

நேரம் போகுதே..
உந்நாணம் தீருமா?
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்து
சொர்கம் செய்வோமா?
சுற்றும் பூமியும்
சற்றே நிற்குமா?
காலை பொழுது விடியும் வரையில்
நிலவை ரசிப்போமா?
துளிர்விடும் விதையாய்-நீ
எனக்குள்ளே புகுந்தாய்
இதயத்தில் நுழைந்து-என்
உயிரினில் அமர்ந்தாய்!
உயிரின் அணுக்களும்
உறைந்தே கிடந்தது-உன்
குரலை கேட்டதும்
மேலே பறந்தது!

எழுதியவர் : H.S.Hameed (13-Apr-19, 10:32 am)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 30

மேலே