வாழையடி வாழை

இறைவன் அருளால்
பிறந்தாள்...
நம் வாழ்த்துக்களில் சிறந்தாள்...
வாழையடி வாழையாய் உதித்தாள்...
சுப்ரஜா விஜயன் ஆகியோரின்
தவப் புதல்வி...

எல்லோர் மனதிலும் இறைவன் இருக்கிறான்..
இது ஆன்மீகம்...
ஒவ்வொருவர் வாழ்த்தும் பெற்றது.. மிக உற்சாகம்...

மிகுந்த நன்றிகள்...
வாழ்த்திய அனைவருக்கும்...

கருவறை ஒன்றே உலகம்
என்று நினைத்திருந்த
பேத்திக்கு... இன்று முதல்
பெரியதொரு உலகம்
வசப்படுகிறது...

புவி உலகை
அவளது முதல் நாளில்
அவள் உணர்வது அவளுக்குத்
தெரியாது வரும் நாளில்...

அவளுணர்வை..
அவள் அழுகை சொல்வதை,
அவளது ஆனந்தம் சொல்வதை..
அவளது கண்கள் சொல்வதை...
என் மனதில் படம்பிடித்துச்
சேமித்து வைக்கிறேன்...
உலகைப் புரிய ஆரம்பிக்கும்
அவளது நாட்களில்
அவளிடம் சொல்வதற்கு...

நீ ஒருத்தி.. எங்கள் பேத்தி
அப்பா.. அம்மா...
தாய்மாமன்கள்... சித்தப்பாக்கள்..
அத்தைகள்.. சித்திகள்
பெரியப்பா.. பெரியம்மா..
அண்ணன் என அழகாய்
உறவு வலைதளம் ஒன்றை
உருவாக்கி விட்டாய்..

பேத்தி என்றாலும்
அவளும் என் தாய்...
என் கைகளின் மதிப்பு
மிகக் கூடியது இப்போது..
பேத்தியை வாங்கி
ஏந்திக் கொண்டதால்..

பூமிப்பந்து புதிதாய்த் தெரிகிறது..
பேத்தி எனும் வசந்தம்
புதியதொரு உறவாய்
வந்து சேர்ந்ததில்...

இனி என் இதயம் துடிக்கும்..
என் பேத்தியையும் நினைத்து...
😀👍🌹👏💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (13-Apr-19, 6:19 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : valaiyadi vaalai
பார்வை : 225

மேலே