தேவதைகள் வனம்
நீ தேவதைகளின் ஏகக் கடவுள்
நான் ரொம்ப ஆடம்பரமில்லாத பக்தன்தான்
நேசத்தை ஆண்கள் தொடங்கி வைக்கிறார்கள்
அதை பெண்கள்தான் பிரிவில் முடித்து வைக்கிறார்கள்
உன் எடைக்கு எடை எதை கொடுப்பது
நீ காற்றைப்போல எடையற்றவள்
ஆனால் சுவாசிக்க ரொம்ப அவசியமானவள்
உன்னால் பட்டாம்பூச்சிகளுக்குள்
வன்முறை பெருகிவிட்டது
உன் கூந்தலை ஸ்பரிசிப்பது தங்களுக்குள் யாரென்ற
போட்டியில்
குழந்தைகளை கொஞ்சும் தேவதைகள்
ரொம்ப அழாகயிருக்கிறார்கள்
பெண்களுக்கு இதையெல்லாம் இவ்வளவு அம்சமாக செய்ய
யார் சொல்லி தருகிறார்கள்
என் இதயம் எங்கும் துளைகள்தான் இருக்கின்றன
உன் சொற்களால் அதில் கொஞ்சம் இசை ஏற்படுத்து
நான் முக்தியடைந்து விடுவேன்
நீ இனிப்பானவள்தான்
ஆனால் எப்படி எதுவும் உன்னை மொய்க்காமல்
அவ்வளவு பாதுகப்பாயிருக்க முடிகிறது
நீயொரு புதிரானவள்
ஆனால் அவிழ்க்க முயன்ற நான்தான்
இப்போது அதில் வசமாக மாட்டிக்கொண்டேன்
உலகின் அதிக அர்த்தம் அடங்கிருக்கும்
பெரிய அகராதி
எனக்கு தெரிந்து உன் கண்கள்தான்
உனக்கு மெல்லிய பொருட்கள் எதன்மீதும்
ரொம்ப ப்ரியமிருக்கிறது
உறங்குவதுகூட ஒரு தலையணை அணைத்தபடிதான்
நீ விரும்பாத ஓரே மெல்லிய பொருள்
இதோ நான் மட்டும்தான்
ஒரு வாளி தண்ணீருக்குக்கூட கிடைக்கிறது
உன் தேகம் முழுவதும் வழிந்தோடும் புண்ணியம்
என் நேசம்தான் அவ்வளவு அதிர்ஷ்டமில்லாததாக இருக்கிறது
என்னைப்போலவே.
பூக்கள்கூட ஒருநாள்தான் மணம் வீசுகிறது
வாடிப்போகாத மலரென்ற வரம்
உனக்கு மட்டும்தான் அருளப்பெற்றுள்ளதா...?