காதல் வலி 67

காதல் கடிதம்

அன்பே
எந்த விழாவிலும்
முன்னால் நிற்காதே
குத்துவிளக்கென்று
தீபம்
ஏற்றிவிடப்போகிறார்கள்
எனக்குக்
கோபம் ஏற்றிவிடப்போகிறார்கள்

நீ
தேக மழை வழிந்து
கருவானவள்
அல்ல
மேக மழை பொழிந்து
உருவானவள்

அதனாலோ
என்னவோ
இந்தக் விவசாயி
இதய உள்ளத்தில்
வர மறுக்கிறாய்

நீ
வயதானால்கூட
பாட்டி ஆவதில்லை
மாறாய்
பியூட்டி ஆவாய்

நீ
ஆலயத்தை இடித்த
அத்வானி
அல்ல
என்
இதயத்தை இடித்த
ஹன்சிகா மோத்வானி

தார் இல்லாத
சாலையிலும்
உன் சுடி தார்
செல்லாத சாலையிலும்
கூட்டம் செல்வதில்லை

கல்லூரியில்
உன்னைப்
பார்த்த ஆண்களெல்லாம்
கள் ஊறிச் செல்கின்றனர்

நீ
ஆரியத்தில் பிறக்காத
ஆரிய மாலா
இன்னும் நான்
சாப்பிடவில்லை
என்ன காதலிக்கவில்லை
என்று கூறிய நாளா

அமுதே
சுடு சொல்லால்
மனதில் ஊற்றாதே
காரீயமே
நீ
இல்லை என்றால்
மறுநாள்
எனக்கு நடக்கும்
காரியமே

அன்னமே
எனக்கே பத்திரம்
எழுதிக்கொடு
உன் கண்ணமே
சொல்லிவிட்டேன்
முன்னமே
என்னை மட்டும்
நினைக்கட்டும்
உன் எண்ணமே

எழுதியவர் : புதுவைக் குமார் (14-Apr-19, 5:43 pm)
பார்வை : 341

மேலே