காதல்

காயும் அனல் எரியும் விறகின் தீயிலும் உண்டு
பரவும் காட்டுது தீயிலும் உண்டு
காயும் கதிரோனின் கதிர்களும் உண்டு
தடாகத்தில் மொட்டாய் வந்த தாமரைக்கு
இதழ்கள் மலர்ந்திட காலைக் கதிரவனின்
இளம் கிரங்களின் அணைப்பும் அனலும்
மட்டுமே வேண்டும் தடாகத்து நீரோடு
மாலையில் மலரும் குமுதத்திற்கும்
இரவில் வானில் வலம்வரும் சந்திரனின்
தண்ணொளியும் குளிரும் மட்டுமே
வேண்டும் தடாகத்து குளிர் நீருடன்

என் அன்பே, நான் உயிர் வாழ
நம் காதலும் மலர எனக்கு
உங்கள் அருள் பார்வையும் , புன் சிரிப்பும்
அன்பாய் அணைக்கும் கரங்களின் ஸ்பரிசமும்
மட்டுமே போதும் வேறொன்றும் வேண்டாம் அன்பே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-19, 9:34 am)
Tanglish : kaadhal
பார்வை : 202

மேலே