இன்பதுன்பம்..
![](https://eluthu.com/images/loading.gif)
உதிரி பூக்கள்தான் காதல்
அதில் உருவம் இல்லை என்றுதான் தேடல்
விழியின் ஒளியிலே மலரும்
அங்கு விளக்கம் சொல்ல யாரால் முடியும்
தினம் தினம் உதிரேச் சூட்டிலே வளரும்
தேடி தேடி மனம்
ஓடி ஓடி தினம் களைத்திடும்
கூடி வாழ்ந்த இரு உள்ளம்
வாடி வாடியே இளைத்திடும்..
பாறை மீது தான் விதையோ
இல்லை பாலில் விழுந்த துளியோ
என்னை மறக்கிறேன்
உன்னை நினைக்கிறன்
ஆயிரம் கோடி வெப்பத்தின் நடுவே
தடைகளும் இனி இல்லை..
அணையை தாண்டி நடந்தேன்
தழுவிய கரம் நீண்டு
தனியாய் வானில் பறந்தேன்
வருங்கால ஆசைகள் நெஞ்சை
இலவசமாய் கேட்குதே
வாடை காற்றும் மேனியை
தீண்ட வட்டம் இட்டு பார்க்குதே..
தொட்டு பார்க்கிறேன் நெருப்பும்
அட என்னைப்போலவே எறியும்..
தோல்வி என்றொரு வழியில்
தினம் ஓடி ஒளியவா முடியும்
எட்டி போகிறேன் பொட்டல் காட்டிலே
பூமியை விட மனம் பாரத்தை சுமக்கையுலே..