உன் மடியிலேயே என் உயிர் போனுமடி,,,,,,,,,,,
உதட்டசைவுகளில்
உன் பெயரை முனு முனுத்த படி
சுவரோடு சாய்ந்து
மெதுவா இடப்பக்கமாக
திரும்பி பார்க்கிறேன் என் வீட்டு
வாசற்கதவை,
வெறிச்சோடிய முற்றம்
ஒத்தை தென்னைமரம்
ஆராவாரமில்லா தெரு
அமைதியாய் வானத்தில் நிலா,
என் தனிமையின் வலிகளை
சொல்ல முடியவில்லை
சொல்லி ஆறுதல் அடையவும்
ஒருவரும் இல்லை,
தனிமையோடு உன் நினைவுகளை
அசை போட்டுக்கொண்டே
வாசற்க்கதவோரம் உன்னை எதிர் பார்த்து
புலம்பி கொண்டிருக்கிறேன்,
நேரம் செல்ல செல்ல
உன் நினைவுகள் என்னை கொள்ள கொள்ள
கண்ணீரோடு கலந்து கொண்டிருக்கிறது
என் கவிதை துளிகள்,
நான் உன்னை
நினைக்காத நாட்கள் சுருங்கி போகுது
உன்னை நினைத்து நினைத்து
என் கண்கள் உருகி போகுது,
அன்பே உனக்காக எழுதிய கவிதைகளோடு
காத்திருக்கிறேன்
நான் கண்ணுறங்கி நாளாச்சு
என் உயிர் போகும் நேரமும் நெருங்கியாச்சி
நான் தலை சாய உன் மடி வேண்டுமடி
உன் மடியிலேயே என் உயிர் போனுமடி,,,,,,,,,,,
இப்படிக்கு,,,,,,,,,,,,,,,உன்னவன்