வசிஷ்டோ பதேசம்

வசிஷ்டோ பதேசம்
************************************

உலக சிந்தனையை அறவே உள்ளத்தில் அழித்துவிட்டு அவ்விடத்தில் நன்றாக விளங்கும்
பூரணப் பார்வையுற்று உலகத்தே உலவு

உள்ளே ஆசையையும் வாசனையையும் நீங்கியவனாய் வெளியே எல்லோரையும் போன்ற
நடையினனாய் உலகத்தே உலவு

உலகத்தோடு ஒத்து ஒழுகிப் பெருந்தன்மையும் இனிமையையும் வாய்ந்தவனாய் உள்ளே
அனைத்தையும் துறந்து தூய்மையானவனாய் உலகத்தே உலவு

எல்லா நிலைமைகளையும் நன்கு பகுத்து அறிந்து ஆராய்ந்து இழிவிலா உயர்நிலையை
உட்கருத்தால் பற்றி உலகத்தே உலவு

உள்ளே நிராசையுடனும் வெளியே ஆசைகொண்டவன் போலும் உள்ளே குளிர்ந்ததும்
வெளியே தாபமுற்றவன் போல உலகத்தே உலவு

அகத்தே குழப்பமற்றும் வெளியே குழம்பினாற் போலவும் அகத்தே
ஒரு காரியமும் செய்யாதவனாகவும் வெளியே எல்லாக் காரியங்களையும்
நீயே செய்பவனாகவும் நடித்து உலகத்தே உலவு

அனைத்துப் படைப்பின் உள்ளத்தை நீ நன்கறிந்தாய் . அதனால்
அந்த அகண்ட பார்வையுடன் உலகத்தே உலவு

உற்சாகம் மகிழ்ச்சி படபடப்பு முயற்சி கோபம் குழப்பம் முதலியவற்றை வருவித்துக்கொண்டு
எதுவுமற்று உலகத்தே உலவு

அகந்தையை ஒழித்து அகங்குளிர்ந்து ஞானவானில் களங்கமற்று ஒளிவீசி
உலகத்தே உலவு

ஆசாபாசம் விடுபட்டு எந்நிலைமையிலும் சமத்துவமுற்றவனாய் வெளியே இயற்கைத்
தொழிலில் ஈடுபட்டவனாய் உலகத்தே உலவு

இவையெல்லாம் வசிஷ்ட மகரிஷி இராமனுக்கு செய்த உபதேசங்களின் ஒரு பகுதி . இரண்டு
நாட்களுக்கு முன் ஒரு முதிர்ந்த சொற்பொழிவாளர் நிகழ்த்திய உரையின் போது அதனை
இரண்டுமுறை சொல்லியதால் அவர் இரண்டாவது முறை சொல்லும்போது என் கைபேசியில்
பதிவு செய்தவை . இதனில் சில சொற்கள் மாறியிருக்கலாம் .ஆனால் கருத்தை அப்படியே
பதிவு செய்திருக்கிறேன் பர நல நோக்கத்தில்

- - - - ( பார்வையிடுவோர்க்கு மிக்க நன்றி )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (16-Apr-19, 12:15 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே