பிம்பங்கள்

உன்னை மறக்கத்தான் நினைக்கின்றேன்
நான் காணும் ஒவ்வொரு முகமும்
உன் சாயலில்....

உதறத்தான் எண்ணுகின்றேன்
உன் உறவுகளை
வேரூன்றிய உன்
உறவு வேர்களை என்ன செய்வது...?

நீ என்னை புறக்கணிக்க
உன் உருவமோ.... பிறருவில்
நான் மறப்பதெங்கே உன்னை...?

பிறைநிலா தூவிச் செல்கின்றது
உன் உடல் ஒளியை
பரிதி வெளிச்சத்தில் - உன்
முத்துப்பல் காண்கிறேன்

யாரோ ஒருவரின் சிகையில்
சிங்காரமாய் அமர்ந்திருக்கும் அந்த
ஒற்றை ரோஜா.... - உன்
உதடுகளை நினைவூட்டுகின்றது...

எங்கோ ஒலிக்கும் குயிலின் கூவல்
உன் குரலை நினைவூட்டியபடி...
கடந்து செல்கின்றது....
நான் தரிசிக்கும் யாவும்
நீயாக மிளிரும்போது...
நான் எதனை மறப்பேன்....!!!
நான் என்பதனை மறந்து
உன் பிம்பமாக மாறி
எனை நான் தொலைப்பேனோ...
பெண்ணே நான் எனை தொலைப்பேனோ...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (17-Apr-19, 1:24 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : pimpangal
பார்வை : 179

மேலே