அவளின் கண் அசைவுக்கு
அவளின் கண் அசைவுக்கு🌹
மின்னலாக தாக்கிய அவள் பார்வை
என் இதயத்தில் அம்பாக தைக்க
தையல் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.
வானத்து தேவதை வழி தவறி வந்துவிட்டாளா
ரம்பை, ஊர்வசி, மேனகையின் வழி தோன்றலா
பூமி தன்னில் இப்படி ஒரு அழகியை காண இயலாது
வில் புருவம் கொண்டு
என் மீது கண்களால் அம்பு எய்தினாளோ அடிபட்டது நான் அல்ல
என் இதயம்
காயத்திற்கு மருந்து உன் பார்வையில் ஒரு இசைவு.
- பாலு.