பாவையே

பசுவிடம்
பால்கறக்கும் பாவையே,
ஒட்டக் கறக்காதே
விட்டுவை கொஞ்சம் கன்றுக்கும்..

கட்டிவை
கன்றைப் பக்கத்தில்,
பசு
கனிவோடு நக்கட்டும்..

உள்ளே
பிள்ளை அழுவது
கேட்கலியா,
போய் அமுதூட்டு
பிள்ளைக்கு..

அவிழ்த்துவிடு
கன்றையும்,
அதுவும் குடிக்கட்டும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Apr-19, 7:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே