வானும் மண்ணும் நீயே!

வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!
கண்கள் தேடும் உருவம் நேயே...
வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!
கண்கள் தேடும் உருவம் நேயே...

சொற்கள் சேர்ந்தாடும் கலைநீயடி
மேகம் கரைந்தோடும் கடல் நீயடி-உன்
மடிமேலே தலைசாய்க்கும் வரமொன்று தருவாயா?
வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!
மனதைத் திருடும் பறவை நீயே...
வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!

உனையே நான்பார்க்க தினந்தோரும் நின்றேனே
அதை உன் கண்பார்க்கவில்லையோ?
இல்லை இதுதானோ பெண்மையோ?
போகும் இடமெல்லாம் உந்நிழல்...
தூங்கும் நொடியெல்லாம் உந்நினைவு...
என் நிலையை கேட்க யாரும் உண்டோ?
தொலைதூரம் துளைந்தேனே
நீயின்றி தவித்தேனே..
வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!
கண்கள் தேடும் உருவம் நேயே...
வலிகள் என்னோடு வாழட்டுமே...
உந்தன் சுமை என்னுள் சேரட்டுமே-நீ
காற்றோடு கலந்தாலும் என்னுள்ளே புதைப்பேனே!
வானும் மண்ணும் நீயே-என்
வாழ்வின் வண்ணம் நீயே!

எழுதியவர் : H.S.Hameed (21-Apr-19, 9:54 am)
சேர்த்தது : HSHameed
பார்வை : 76

மேலே