பயனற்ற மொழி

ஈன்ற தாயை போற்றா மொழியும்
ஆன்றோர் சான்றோர் மதியா மொழியும்
வேண்டிய பொழுதில் உதிரா மொழியும்
வேண்டாப்பொழுதில் வீழும் மொழியும்
துன்புறும் பொழுதில் இனியா மொழியும்
மகிழும் பொழுதில் பகிரா மொழியும்
சினம் கொண்ட பொழுதில் அடக்கா மொழியும்
பேசிய பின்பு உறுத்தும் மொழியும்
ஆறா வடுவாய் வதைக்கும் மொழியும்
வென்ற பொழுதில் உயர்தா மொழியும்
தோல்வியின் பொழுதில் தளர்த்தா மொழியும்
அறத்தை கண்டு வியக்கா மொழியும்
தீமை கண்டு தூற்றா மொழியும்
செவிகள் இனிக்க உரையா மொழியும்
மானுடம் சிறக்க மொழியா மொழியும்

பயனற்ற மொழியேயாம்!!

எழுதியவர் : Revathy Swaminathan (24-Apr-19, 12:23 am)
சேர்த்தது : Revathy S
பார்வை : 108

மேலே