தொட்ட சுகம் தந்த காதல்
தோட்டத்தில் தொட்டேன் மலர் மலர்ந்தது
உன்னைத் தொட்டேன் சுகம்தான் என்று
உன் பார்வையில், கண்களின் ஓரத்தில்,
நீ காட்டிய பேசா மொழியில் அதைத்
தெளிவு படுத்தி என் மனதில் வந்து
அமர்ந்தாய் மலர்ந்தாய் இதய கமலமாய்
இப்படி மனதில் நீ புகுந்து என்னுள் கலக்க
இதை தொட்ட சுகம் என்பேனா இல்லை
தொட்டதும் வாடா மலராய் என் இதயத்தில்
அமர்ந்த காதலியே நீ தந்த காதல் பரிசென்பேனா
நீயே சொல்லடி எந்தன் காதல் பைங்கிளியே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
