காதல் கணவன்
என் எண்ணம் புரிந்து
எனக்காக காத்திருந்து
என் துன்பத்தை பகிர்ந்து
எனக்கு துணையாக வந்து
என் தயக்கம் கண்டு
எனக்கு தாயாக மாறி
தாலாட்டி
என் தந்தையாக காத்து
என் மீது கோபம் கொள்ளும் விதத்திலும்
உன் காதலை காட்டும்
என் அன்பு காதலனே....!
உன்னோடு வாழ்ந்திட
எனக்கு ஓர் ஜென்மம் போதுமோ..... ?