வாசம்

துணிகளில்
வெயில் வாசம்
மழை தீண்டிய மண்
புத்தகங்கள்
தண்ணீர் பாய்ச்சிய புல்வெளி
அடுப்பில் பாகு வெல்லம்
ஆலயத்துள் கற்பூரம்...
இப்படி
எத்தனையோ வாசங்களில்
புதைந்துள்ளன
புன்னகை விதைகளும்
மென்மையான நினைவுகளும்
மௌனமான கனவுகளும்...
மணம் சுட்டி பொருள் விளக்கயியலா
வார்த்தைகளில் கூட
அவைப் புதைந்திருக்கும்...
கண்ணீர்த் துளிகளும்
சாய்ந்து கொள்ளத் தோளும்
மீட்டெடுக்க இயலாது
கரைந்த நேற்றுகளை
எனினும்...
நாளைகளில் கானல் வரின்
தண்ணீரும் தேநீருமளித்து
மனநிழலில் இளைப்பாற்றும்...
வாசித்தவுடன்
சில வார்த்தைகளில் தான்
எத்தனை கனம்
பிள்ளைகளைப் போல்
விரல் பிடித்து
மெல்ல அழைத்து வருகையில்
மணம் வீசுகிறது பேரன்புப் பூக்கள்...

எழுதியவர் : மதுமதி.H (29-Apr-19, 11:51 am)
சேர்த்தது : மதுமதி H
Tanglish : vaasam
பார்வை : 72

மேலே