மு பா

கவிஞர் மு.பா

மு.பா
உன் கவிதைகள்
அனைத்தும்
வளர்ந்துவிட்டது
தமிழ்த் தோப்பா

தமிழுக்கு
நீ போடுவதில்லை
தாப்பா

நீ மு.பா
அல்ல
வள்ளுவரின்
முப்பா

மு பா
உமக்குத்
தமிழ் வளர்க்க
இறைவன்
தரவேண்டும்
அதிக மூப்பா

நீதானே
இருக்கின்றாய்
கலைந்த தலையான
தமிழின்
தலையை வாரும்
சீப்பா

உன் வீட்டுப்
பூக்கள்
வடிக்கின்றன
பாக்கள்

உன்
அங்கம்
அங்கமல்ல
தமிழ்ச் சங்கம்

உன்
கையில்
கிளி உண்டு
உன் மெய்யில்
கிலி இல்லை

உன்
அக நூலுக்கு
பிடித்த நூல்
முக நூல்

மழையைவிட
மழலையை
விரும்புபவர் நீர்

நீ
கையில் வேல் கொண்ட
சுப்ரமணி அல்ல
கையில் நூல்
கொண்ட சுப்ரமணி

தமிழுக்கு நீ
சுப்ரமணி
ஆங்கிலத்தில்
நீ சூப்பர் மணி

அண்ணன்
மு. பா விற்கு
மாலையாகட்டும்
இப்பா

எழுதியவர் : புதுவைக் குமார் (1-May-19, 11:44 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : mu baa
பார்வை : 72

மேலே