உதிர்ந்த மலர்
மலரொன்று மண்ணில் உதிர்ந்தது
மௌனமாய்ச் சிரித்தது
மலரும் போதும் சிரிக்கிறாய்
மண்ணில் உதிர்ந்த பின்னும் சிரிக்கிறாய்
எப்படி என்று கேட்டது மண் !
எல்லாவற்றையும் தாங்கி பொறுமையுடன் கிடக்கிறாய்
உனக்கான பரிசுச் சிரிப்பு என்றது மலர்
மண்ணும் மகிழ்ந்தது !