மழையே மா மழையே வராதே
மழையே மழையே மா மழையே
வராதே வராதே பொழிய வராதே
வள்ளுவன் சொன்னதைப் போல் யாருமில்லை
உன் வரவை எண்ணி குதுகலிக்க ஒருவருமில்லை
ஆழ குழித்தோண்டி நீர் பார்த்தோம்
அதன் தரத்தை சேதப்படுத்தி விலைக்கு விற்றோம்
ஆற்றை ஏரியை அரசு சொத்தாக்கி
அரசு அலுவலகத்தை அதிலே கட்டி மகிழ்ந்தோம்
வளர்ந்த மரத்தின் வேர் நறுக்கி
சாலை அகலத்தை விரிவாக்கி அகமகிழ்ந்தோம்
மங்கல மரங்களை வெட்டி அழித்தோம்
பங்கமான செயலாலே வெற்றி அடைந்தோம்
மழையே மழையே மா மழையே வராதே
உன் மகத்துவம் புரியும் வரை பொழியாதே.
- - - நன்னாடன்.