திரைப்படமும் மட்டைப்பந்தாட்டமும்

இல்லையோ திறமை
இத்தேச இளைஞர்களுக்கு
வெளிக்கொணர முயலவில்லை
இழுக்குதான் அரசுக்கு

அரசியல் பதவிக்கு ஆ
சைக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு
அடுக்குச்சட்டி தூக்குகின்ற
ஆளாய் மாறுவதே பெரும் மதிப்பு

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
வருகின்ற தேர்தலுக்கு
ஆண்டுதோறும் அடிமையாய்
மாறுகின்ற வேலையே இளைஞருக்கு

திரைப்படமும் மட்டைப்பந்தாட்டமும்
மானசீகமாய் மாறியது இந்தியனுக்கு
திறமையை வளர்த்து உய்ய நேரந்தான்
எங்குள்ளது இன்றைய இந்தியனுக்கு

தீயைக் கொண்டு தீயவைகளை
திறம்படவே அழிக்க வேணும்
தீரத்தோடு திட்டந்தனை வகுத்து
திறமையை இளைஞருக்கு புகுத்த வேணும்
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-May-19, 12:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே