குழந்தையின் சிரிப்பில்!
ஆஹா!
உலகம் மறந்தேன்!
இந்த தேனின் சுவையை கண்டு!
என்னை நானே மீண்டும் மீண்டும்,
சிறை பிடித்தேன்!
கண்ணெடுக்க மனமில்லை
இந்த பூவை விட்டு!
பூவுக்கும் பூத்தது பூ!
மழலையின் சிரிப்பு!
சித்தாளாய் இருந்தாலும்,
பிள்ளையின் சிரிப்பில் சொர்க்கம் கண்டாள்!
பெத்தவளின் பசி நீக்க,
புழுதியிலும் புன்னகையை பரப்பியது
குழந்தை ஞானி!
கவலை உலகில் நீங்கள் தவித்தால்
வெளியேரலாம்
குழந்தையின் சிரிப்பில்!!!