காத்திருப்போம்
தோகைமயிலின் குஞ்சுகளும்
தோற்றத்தில்
கோழிக்குஞ்சுகள் போலிருக்கும்..
வேறுபாடு தெரிவதில்லை
பாய்தோடும்
பரியின் குட்டிக்கும்,
பொதிசுமக்கும்
கழுதையின் குட்டிக்கும்..
வளர்ந்தபின்தான்
வருகின்றன பேதங்கள்-
அழகாய், அல்லதாய்..
ஆனாலும்
ஆபத்தானவன் மனிதன்,
பிள்ளையாயிருக்கையில் வராத
கள்ளமெல்லாம்
வந்துவிடுகிறது வளர்ந்ததும்..
தமக்குள்ளே
பேதங்கள் காட்டித்
தன்னினத்தையே அழிக்கும்
ஒரே மிருகம்-
மனிதன்தான்..
மாறுவானா,
மாறவேண்டும்..
காத்திருப்போம்...!