காதல் வலி 68
நீ பௌர்ணமி
நான் அமாவாசை
எனக்கோ
நீ என்
பிள்ளைக்கு
அம்மாவாக ஆசை
நீ நிலா
என்னோடு
நில்லாமல்
ஓடிவருவாயா
அன்பே
நீ என்னை
கடலில் போட்டிருந்தால்
கட்டுமரமாக மிதந்திருப்பேன்
நீயோ
காதலில் போட்டுவிட்டாய்
காட்டுமரமாய் தவிக்கிறேன்
உன்
கனவிலாவது
என்னை
கணவன் ஆக்கு
அல்லது
உன் கைபிடித்தக்
கனவான் ஆக்கு
உன் சேலை
சேலை அல்ல
நான் நடக்கும்
சாலை
நான் படிக்கும்
பாடசாலை
இறைவா
என்னை அவள்
வீட்டுக்காராகத்தான்
ஆக்கவில்லை
அவள் வீட்டு
காராகவாவது மாற்று
அவளோடு நான்
பயணிக்க