காதலியக்கம்
இதமான பூங்காற்று
இசையோடு ஓர் பாட்டு
உன்னோடு கை கோர்த்து
உரையாடுதே என் நிழல்...
இரவிலே நடை பயணம்
உறவிலே புது சலனம்
புரிந்ததே உன் மனமும்
அதில் புணர்தல் தான் தினமுமே....
நிலவின் நிழலும் நீ தான்
நிஜத்தில் நிலவும் நீ தான்
கடலில் எழும் அலையே
என் மார்பெனும் கரையில் சாய வா....