தேன் நிலவு
நானும் பதியே
வளைந்தோடும் நதியே
சாயாத தனத்தைக் கண்டு
சாய்ந்திட துடிக்குமென் நெஞ்சை
தலை சாய்த்து வை உன் நெஞ்சில்
கண்டார் உயிர் உண்ணும்
உன் கண்
தன் நோய்க்குத்தானே மருந்தாகும்
காதற்பெண்
கண்டால்
அசையும் மெல்லினம்
உன் முகம் கண்டால்
அசையாது - இரசிக்கும்
கவிஞன்- கண் இனம்
கண்ணோடு கண் கலந்தால்
அது - காதல்
மெய்யோடு மெய் கலந்தால்
அது - காமம்
வளிக்கு இடை
செல்லத் தடை செய்வோம்
ஊடல் கொஞ்சம்
கூடல் கொஞ்சம்
தினம் தேடல் தரும்
சுகம் காண்போம்
தீண்டினால்தான் சுடும் தீ
நீங்கினால் சுடுகிறாய் நீ
இது என்ன விந்தை
அதை எங்கிருந்து பெற்று வந்தாய்?
சூரியன் தராத வெப்பத்தை
நீ இரவில் தருவது எப்படி?
நீ கூடினால் போதும்
ஆயுள் கூடும் என் வாழ்வும்
என் உடற் கூட்டைவிட்டு
நீ நீங்கினால்....
அதற்கு பெயர்தான்-சாவு
இளம் தேனீ உண்டு
ருசிக்கத்தானே
பூத்திருக்கு பூவு
துணி மணியில்லா
உறைபனியாவதுதான்
தேன் நிலவு