தனிமையில்

விட்டுச் சென்றவன் வருவான்
என்று தனிமையில்

கோடை வந்து கொளுத்திவிட்டுப்
போனது

மழை வந்து நனைத்துவிட்டுப்
போனது

குளிர் வந்து குளிரவைத்துப்
போனது

அவன் மட்டும் வரவேயில்லை

நான் இன்னும் தனிமையில்

எழுதியவர் : நா.சேகர் (5-May-19, 11:20 am)
Tanglish : thanimayil
பார்வை : 542

மேலே