அங்கிட்டு சம்பிட்டு

ஏன்டா பேரப் பையா பெருமாளு, உன் மனைவி மைனாவுக்கு மணியாட்டம் ரண்டு பசங்க பொறந்திருக்காங்க. அஞ்சு நாளு ஆகுது. இன்னும் பேரு வைக்காம இருக்கற. அட சாமி, பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வச்சிடாதே. நம்ம கிராமத்து சனங்க ஒருத்தருகூட நம்மல மதிக்கமாட்டாங்க. முப்பது வயசுக்குள்ள நம்ம ஊரிலுள்ள ஒருத்தர் பேருகூடத் தமிழ்ப் பேரு இல்ல. அதனால ரண்டு கொழந்தைங்களுக்கும் நமும ஊரில ஆரும் வைக்காத இந்திப் பேருங்களா வச்சிருடா பேரா. அப்பத்தான் நாம தலை நிமிந்து நடக்க முடியும்.
@@@@@
பாட்டிம்மா பசங்க பேரையெல்லாம் முடிவு பண்ணியாச்சு. நம்ம குடும்ப சோசியர் குமாரசாமி, என் கணித சோசியர் ஏக்நாத்து, கோயில் அர்ச்சகர் ஹரிகரன் சாமி எல்லாரையும் கலந்து ஆலோசித்து பசங்க பேருங்கள முடிவு பண்ணியாச்சு.
@@@@@#
சொல்லுடா சீக்கிரம்? கேக்க ஆசையா இருக்குது.
@@@@
ஒரு பையம் பேரு 'அங்கிட்' , இன்னோரு பையம் பேரு 'சம்பிட்'.
@@@@
அங்கிட்டு இங்கிட்டுங்கற மாதிரி ஒரு கொழந்தை பேரு அங்கிட்டா? இன்னொரு கொழந்தை பேரு சம்பிட்டா? என்னவோ. இந்திப் பேரா இருந்தாச் சரி.
@@@@@
சத்தியமா ரண்டும் இந்திப் பேருங்கதான் பாட்டி.
@@@@@
அப்ப சரி.
■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆
Ankit = considered, signet, symbol.
Sambit = consciousness.

எழுதியவர் : மலர் (5-May-19, 12:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே