காதல்

சிப்பிக்குள் முத்து,
முத்து தெரிந்தால்தான்
முத்துக்கும் அழகு, அதை
தன்னுள் வைத்த சிப்பிக்கும்,
பெண்ணே உன் செவ்விதழ்கள்
அலர்ந்தால் அல்லவோ, அலர்ந்தபின்
நீ சிரிப்பை சிறிது உதிர்ந்தால் அல்லவோ
அந்த உன் வெண்பற்களுக்குள் நீ
பூட்டிவைத்த சிரிப்பின் அழகு தெரியும்
புரியும் காணும் உன் காதலன் எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-May-19, 9:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 231

மேலே