ராதையின் கள்வன்

சூரியனின் ஒளியும் தீண்டாமல்
சந்திரனின் ஒளியும் வருடாமல்

தண்ணீர் பந்தலில் தாகம் காணாமல்
குருதியும் வெளிக்கன்டிலேன் மாயக்கண்ணனே.....

மனதை துளைத்து விதையும் விதைத்து
ஆலமரமாய் பற்றிக்கொண்ட
கோபியர்களின் மன்னனே.......

மார்கழியாய் ஒருபொழுது குளிரவும் செய்கிறாய்
சித்திரைதிங்களாய் மறுபொழுதே வாடவும் செய்கிறாய்........

இம்சிக்கும் நொடியுமிங்கு இனிமையே என்றுரைப்பேன்
ராதையின் கள்வனே................

எழுதியவர் : YUVATHA (6-May-19, 10:16 am)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 376

மேலே