வேங்கை எனக் காட்டிடுவோம்

உயிரைக் குடித்து உரிமையைக் காத்திடுவோம்.
செங்குருதி சிந்தி உறவைக் காத்திடுவோம்...../


நம் உயிரைக் கொடுத்து நம்
இனத்தைக் காத்திடுவோம்.
நரபலியாக எதிரியைக் கொடுத்து
நம் நகரத்தைக் காத்திடுவோம்.../

கொடுத்த உயிருக்கு சன்மானமாய்
சுதந்திரம் கண்டு மகிழ்ந்திடுவோம். சிந்திய இரத்தத்தால் அடிமை விலங்கு உடைந்ததை எண்ணி புகழ்ந்திடுவோம்.../

சீறிப் பாயும் கோபத்தாலும் அடங்கிப் போகாத குணத்தாலும் வீரமகன் நாம் என்பதை உணர்த்திடுவோம். ..../

அடங்கிப் போகமாட்டான்
அநிதியை அழிப்பவன் என
ஆட்டம் காட்டு அநியாயக்
காரனை ஓட்டம் காட்ட விட்டு
ஒன்று கூடி நின்று கரங்கள்
தட்டி ஓசை எழுப்பி சிரித்திடுவோம் ...///

புத்தி புகட்ட முயன்றிடுவோம்
அதை தட்டி விட்டால் யுத்தம்
கொண்டு வென்றிடுவோம்
பெண்மையும் பொறுமை இழந்தால்
வேங்கை எனக் காட்டிடுவோம்

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-May-19, 12:41 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 163

மேலே