இலை

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள வன்னிப் பகுதியைத் தெரியாதவர்கள் இல்லை. காரணம் முள்ளிவாய்க்காலில் பல நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு ஈழத்துப் போர் நடத்தி , பல ஆயிரத் தமிழர்கள்அரசினால் படுகொலை செய்யப்பட்ட பூமி. அது ஒரு காலத்தில் இலங்கையின் நெல் களஞ்சியமாக இருந்தது வன்னி வாசிகளின் பிரதான தொழில் விவசாயம், குளங்கள் வயல்கள், வாழைத் தோட்டங்கள் பல நிறைந்த பூமி . வன்னியில் கிராமப் பெயர்களோடு குளமும் ஓட்டிக் கொள்ளும் அது போன்ற கிரமங்களில் விளாத்திக்குளம் என்ற கிராமமும் ஓன்று இது யாழ்ப்பாணம்- கண்டி A9 பிரதான பெரும்பாதையில் உள்ள மாங்குளத்துக்கு மேற்கே பத்து கி மீ தூரத்தில் அமைந்த கிராமம் . கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே விளாத்தி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த படியால் குளத்துக்கு விளாத்திக்குளம். என்ற பெயர் வந்தது
****
அன்று சனிக்கிழமை. வாரம் தோறும் சனிக்கிழமைகளில் விளாத்திக்குளம் கிராமத்தில் காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணி வரை சந்தை கூடும். பல கிராமங்களில் இருந்து கிராமவாசிகள் தமது உற்பத்தி பொருட்களை அந்த சந்தையில் கொண்டு வந்து விற்பார்கள்.அவர்களில் விளாத்திகுளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னன் என்ற சின்னப்புபிள்ளையும் ஒருவன் .சின்னனை விளாத்திக்குளத்திலும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரியாதவர்கள் இல்லை . அதக்கு முக்கிய காரணம் அவனின் மூன்று ஏக்கர் காணியில் ஓங்கிவளரந்து பல வகை வாழை மரங்களும், பொன்னாங்கண்ணி .தூதுவளை பச்சைக்கீரை, முசுட்டை ஆடாதொடை
முருங்கை இலை கருநொச்சி போன்ற கீரை இலைகளும். மரக்கரிகளுமே . தமது தேவைக்கான மூலிகை இலைகளைத் தேடி நாட்டு வைத்தியர்கள் வெகு தூரத்தில் இருந்து சந்தையில் உள்ள சின்னனின் கடைக்கு வருவார்கள்

விளாத்திகுளத்தில் இருந்து சுற்றுப்புறத்தில் உள்ள நகரங்களான துணுக்காய், மாங்குளம், கிளிநொச்சி, வவுனியா, பூநகரி போன்ற நகரங்களில் உள்ள உணவகங்களுக்கு வாழை இலைகளும் வாழைப்பழங்களும் வினியோகிப்பது சின்னன். அதுமட்டுமல்ல சனிக்கிழமை நடக்கும் சந்தையில் சின்னனையும் அவனின் மனைவி செல்லம்மாவை தவராது காணலாம் அவர்களுக்கு எனச் சந்தையில் முதிரை மரத்துக்குக் கீழ் ஒதுக்க பட்ட இடத்தில் வாழைஇலைகள். தாமரை இலைகள் பல வித இலை வகைகள் விற்கும் சின்னனின் கடை மற்றைய கடைகளை விட மாறுபட்டகடை. அந்த கடையின் ஒரு பகுதி வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைக்கும்

கொள்ளு காரப் பொங்கல்,கொள்ளு - கறுப்பு உளுந்து வடை, பனங்கிழங்கு பாயசம், விளாத்திக்குளத கிராமத்தில் விளையும் பொருட்களைக் கொண்டுசெல்லம்மாவின் சமையலில் உருவான , கிராமத்து உணவு பண்டங்கள் இருக்கும்.

*****
ஊடகங்களில் வன்னியில் உள்ள ஈழத்து போரில் செய்திகளாக வந்த ஊர்களின் சிறப்புகளை சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்தும் சொல்லும் சுற்றுலா வழிகாட்டி ரவீந்திரன் . இங்கிலாந்து. அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இருவரோடு விளாத்திக்குள சந்தைக்கு வந்தான் ரவி. இதற்கு முன்பு மூன்று தடவைகள் சுற்றுலாப் பயணிகளோடு அந்த சந்தைக்கு வந்த அனுபவம் அவனுக்கு உண்டு. சின்னனை ரவீந்திரனை நன்கு தெரியும்
அதனால் சின்னனை இரு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் . பல வித இலைகள் விற்பனைக்கு இருப்பது சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் புதிராக இருந்தது வந்திருந்த இரு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓரளவுக்குத் தமிழ் பேசத் தெரியும்

தங்களை தாமஸ் . ஜான் என்று முதலில் அறிமுகப்படுத்தி வாழை, தாமரை இலைகள் சுட்டிக் காட்டி அவை எதற்கு என்று ஜான் கேட்டார்

“இந்த இலையில் வைத்து நம் ஊர் சனங்கள் உணவு உண்பார்கள் அது தனி ருசியைக் கொடுக்கும். தமிழர்களின் மரபுவழி வந்த உணவு உண்ணப் பாவிக்கும் இயற்கை கொடுத்த உபகரணம் வாழை இலை. தாமரை இலையும் அது போன்றதே வாழை இலை பயன்படுத்தி அதில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை.
இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவார்கள் . வாழையிலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பார்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைப்பவன் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்” வந்த இருவருக்கும் சின்னன் விளக்கம் கொடுத்தான்,

சின்னன் சொன்னதைக் கேட்ட தாமஸ் பக்கத்திலிருந்த காதர் நானாவின் கடையில் அடுக்கி இருந்த பேப்பர் பிலேட்டுகளை காட்டி
“ எங்கள் ஊரில் அந்த கடையில் உள்ள பேப்பர் பிலேட்டில் அல்லது செரெமிக் பிளேட்டில் சாப்பிடுவோம், சாப்பிட்டபின் பேப்பர் பிலேட்டை எறிந்து விடுவோம் செரமிக் பிளேட்டை கழுவித் திரும்பவும் பாவிப்போம். செலவு குறைவு”


“ இருக்கலாம் சேர் ,ஆனால் அந்த கழுவிய செரமிக் பிளேட்டில் அது கழுவிய இரசாயனம் ஒட்டிக் கொண்டு இருக்குமே. அது உடலுக்கு நல்லது இல்லையே “

“அது சரி மற்றைய விதம் விதமான வடிவத்தில் உள்ள இலைகள் என்ன? மூலிகைகளா?” ஜான் கேட்டார்

“ஆம் சார். வருத்தத்துக்கு வைத்தியர் எழுதிக் கொடுக்கும் மேற்கில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் குளுசைகளை விட இவை மிகவும் சிறந்தவை . நீரழிவு வியாதிக்குக் கூட இலை உண்டு . சில குளுசைகளை இந்த மூலிகைகளில் இருந்தே தயாரிக்கிறார்கள். இந்த வன்னியில் உள்ள ஊர்களில் நாட்டு வைத்தியத்துக்கு இந்த இலைகளைத் தான் பாவிக்கிறார்கள்

சில வகை மூலிகைகளில் ஏதாவது ஒரு பாகம் மட்டுமே அதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும். கருநொச்சி மூலிகைச் செடி முழுவதும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதனால் சித்தர்கள் இதனை ஓர் அபூர்வ வகை மூலிகையாகவே வர்ணித்து வருகின்றன
பொன்னாங்கன்னி .தூதுவளை பச்சைக்கீரை, முசுட்டை ஆடாதொடை இலைகள் சமைத்து உண்டால் உடலுக்கு நல்லது” சின்னன் சொன்னான் ,

“சின்னன் உன்பக்கத்தில் இருந்து மண் சட்டியில் உணவு தயாரிப்பது உன் மனைவியா” ? தாமஸ் கேட்டார்

“அவள் சமைக்கும் உணவு சுவையோ சுவை . சுவைத்து பாருங்கள் அப்போது தெரியும்

ஜோனும், தோமசும், ரவீந்திரனும் சுவைத்துப் பார்த்து மூவரும் பிரமாதம் என்றார்கள்,

“சேர் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும் உணவுக்கும் மண் சட்டியில் சமைக்கும் உணவுக்கும் தரத்தில் வித்தியசம் உண்டது கிராமங்களில் மண் சட்டியில் தான் சமைப்பார்கள் . காஸ் அடுப்பு கிடையாது. விறகில் சமையல் நடக்கும்.”

“ அது சரி மண் சட்டிகள் எங்கே கிடைக்கும்”?


“அதோ தூரத்தில் தெரிகிறதே ஒரு கடை அது முருங்கன் ஊரைச் சேர்ந்த அந்தனியின் கடைஅவன் மண்ணில் சட்டி பானை செய்பவன். அந்த முருங்கன் ஊர் மண் சட்டி பானை செய்வதற்கு உகந்தது. வேண்டும் என்றால் நீங்கள் அவரிடம் சட்டி பானை வாங்காலாம்:”

“சின்னன் நாங்கள் இருவரும் மூல தனம் போட்டு கொழும்பில் ஒரு உணவகம் ஆரம்பிக்க இருக்கிறோம். அதக்கு பெயர் கிராமத்து விருந்து: அதில் இலங்கை கிராமங்களில் உள்ள உணவுகளை மண் சட்டியில் சமைத்து, வாழை இலை, தாமரை இலையில் பரிமாற யோசித்துள்ளோம் . உனதும் உன் மனைவியினதும் உதவி எங்களுக்குத் தேவை” தாமஸ் சொன்னார்


“ நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் கிராமத்து விருந்து உணவகத்தை ஆரம்பித்து வைக்க எங்களால் இயன்ற உதவியை நாங்கள் இருவரும் செய்யத் தயார் சேர்” சின்னன் சொன்னான் .

“உங்களை சந்தித்துப் பேசியது நாம் ஆரம்பிக்க இருக்கும் வியாபாரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். இதோ எங்கள் பிசினஸ் கார்ட். உன்னோடு வெகு விரைவில் தொடர்புகொள்கிறோம்”, என்று சொல்லிக் கைகுலுக்கி ஜோனும் தோமசும் விடை பெற்றனர்

****

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (8-May-19, 3:12 pm)
Tanglish : illlai
பார்வை : 254

மேலே