பொன்மாலைப் பொழுது

#பொன் மாலைப்பொழுது

அற்புதமாய் ஒரு பொழுது
விற்பன்னர் பலருடனும்..!

பாபாவின் தரிசனமும்
பகவான்கள் தரிசனமும்..!

பாடல்கள் குறுந்தகட்டில்
பாபாவை பூசித்தே..

நேரலையாய்ப் பாட்டு வர
நெஞ்சிலின்பம் கூடுதலே..!

இனிமைக் குரலினிலே
ஏகாந்தப் பாடல்களே

உள்நுழைந்து ஊடுருவி
கொள்ளைக்கொண்டதே மனதை..!

சுகிசிவம் சொற்பொழிவில்
சுகிர்த்திருந்தோம் தேன் மழையில்..!

விழிக்குணவு செவிக்குணவு
வாய்க்கும்தான் நல்லுணவு..!

பாபாவைப் பாடிவைத்தார்
குறுந்தகட்டை வெளியிட்டார்..!

வெண்கலத்துக் குரலினிலே
சங்கொலித்த பாடல்களே

வெளியீட்டு நாளினிலே
வாழ்த்தவே யாம் சென்றோம்

பாபாவின் வாழ்த்தினையே
பரவசமாய் பெற்று வந்தோம்

கோவிலுக்குச் செல்லலாமா
கேட்டவுடன் கிளம்பிவிட்டேன்

அன்புடனே அழைத்துச் சென்ற
தோழி சியாமளா அவர்களுக்கு
உரைத்திடுவேன் இந்நாளில்
நெஞ்சார்ந்த நன்றிகளை..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 9:12 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 50

மேலே